மிட்டாய் கவிதைகள்!

மாலையிடவரும் மரிக்கொழுந்து

July 20, 2013

முகமும் தெரியாது
முகவரியும் தெரியாது
முழு இரவும் நான் கொள்ளும்
மணமகளின் நினைவு
மட்டும் நெஞ்சுக்குள்ளே!

நள்ளிரவில் நடுத்தெருவில்
நின்று கொண்டு
சாரல் சிதறலில்
என் வாழ்வை வண்ணமாக்க
வானவில்லாய் அவளைத்
தேடிய போது,

ஏழு வண்ணம் மட்டும் உனக்கெதற்கு,
எல்லாமும் தருகிறேன் எனச் சொல்லி
இருளை விரட்டி வெண்ணிலவாய்
என் அருகில் வந்து
விரலிடையில் விரல் சேர்த்துக்
கருவிழியில் காதல் செய்து,

அவள் கையிரண்டால்
என் கழுத்தைக் கட்டியணைத்து
மாலையாக என் மார்பில்
விழும் நேரம்,
ஓருயிராய் ஒன்றாய் என்றும்
அவளுடன் வாழத் துடிப்பேன்,
வாழும் வரையில்,

அந்த அன்பான உறவை
அழகான பெண்ணைத்
தேடித் திரிகிறேன்,
என் சோகங்கள் குறைந்து
மேளங்கள் முழங்க!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்